2 பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது
2 பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.
திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்.ஐ.டி. பின்புறம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து சுமார் 22 கிலோ புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து காமராஜ் நகரை சேர்ந்த அன்பு ரோஸ் (வயது 54) மற்றும் பூமிநாதன்(40) ஆகியோரை கடந்த 6-ந் தேதி கைது செய்தனர். அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.