போதை மாத்திரை விற்ற 2 பேர் சிக்கினர்

போதை மாத்திரை விற்ற 2 பேர் சிக்கினர்

Update: 2023-06-30 18:45 GMT

கோவை

கோவைஆசாத் நகரில் உள்ள மைதானத்தில் நேற்றுமுன்தினம் சிலர் போதை மாத்திரை விற்பனை செய்வதாக கரும்புக்கடை போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 வாலிபர்க ளை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த ஹியூஸ்னர் சேட்டு (வயது 28), குறிச்சி பிரிவை சேர்ந்த மன்சூர் ரகுமான் (29) என்பதும், வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்ததும் தெரியவந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 76 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்