கஞ்சா வைத்திருந்த 2 பேர் பிடிபட்டனர்
நெல்லையில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் பிடிபட்டனர்
நெல்லை மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பாத்திமா நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெருமாள்புரம் இலந்தைகுளத்தை சேர்ந்த இருளப்பன் மகன் ஆகாஷ்பவுல்டேவிட் (வயது 20), பாளையங்கோட்டை தெற்கு பஜாரை சேர்ந்த அரசகுமார் மகன் ஸ்ரீஹரி (19) ஆகியோர் என்பதும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 20 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.