கன்னியாகுமரியில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
கன்னியாகுமரியில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி சின்னமுட்டம் கோவில் தெருவை சேர்ந்தவர் கான்ஸ்டின் ராபின் என்ற லக்ஸ் (வயது 21). இவரும் சுனாமி காலனியை சேர்ந்த ஜெப்ரின் (21) என்பவரும் கடந்த 23-ந் தேதி இரவு விவேகானந்தபுரத்தில் ஒரு ஏ.டி.எம். மையம் முன் கையில் கத்தி வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டினர். மேலும் கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்குள் அவர்கள் தப்பி சென்றனர். இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு 2 ேபரையும் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரையும் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
---