குளித்தலை அருகே கூடுதல் வட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

குளித்தலை அருகே கூடுதல் வட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-23 18:22 GMT

குளித்தலை அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 36). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி பூங்கொடியிடம் குடும்ப செலவுக்காக ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அந்த தொகைக்கு அசலும், வட்டியும் கொடுத்து விட்டதாகவும், கடன் பெற்ற சமயத்தில் அடமானமாக எழுதிக்கொடுத்த புரோ நோட்டை திரும்ப வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று விஜயலட்சுமி வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற கணேசன் (65), அவரது மகன் ரெங்கராஜ், அவரின் சகோதரியின் கணவர் செல்வராஜ் (54) ஆகிய 3 பேரும் சேர்ந்து விஜயலட்சுமியை திட்டி விஜயலட்சுமியின் மகளையும் கீழே தள்ளியுள்ளனர். அவர்கள் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து நடந்த சம்பவம் தொடர்பாகவும் கடன் வாங்கிய தொகைக்கு அதிக வட்டி கேட்டு மிரட்டுவதாகவும் அவர்கள் 3 பேர் மீது விஜயலட்சுமி குளித்தலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் செல்வராஜ், ரங்கராஜ், கணேசன் ஆகிய 3 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், கணேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரெங்கராஜை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்