அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-14 20:21 GMT


விருதுநகர் அருகே அர்ஜுனா ஆற்றுப்படுகையில் வச்சக்காரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் போலீசாருடன் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் கோவிந்தநல்லூரை சேர்ந்த வைரமுத்து (வயது 27) என்பவர் தனது டிப்பர்லாரியில் தண்டியனேந்தலை சேர்ந்த கருப்பசாமி (27) என்பவர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அனுமதியின்றி மண் அள்ளி கொண்டிருந்தனர். போலீசாரைக்கண்டதும் இருவரும் தப்பி செல்ல முயன்றனர். ஆனாலும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் தாங்கள் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக ஒப்புக்கொண்ட நிலையில் டிப்பர் லாரியையும், ஜே.சி.பி. எந்திரத்தையும் பறிமுதல் செய்ததோடு அவர்கள் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்