மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது
மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த தனசிங் (வயது 60) மற்றும் வினோத் (30) ஆகியோரது வீடுகளில் போலீசார் சோதனை செய்தபோது மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.