புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
மணலூர்பேட்டையில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்,
மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மொபட்டில் வேகமாக வந்த மணலூர்பேட்டை கோரி தெருவை சேர்ந்த ஜாகிர்உசேன் (வயது 48) மற்றும் நாட்டார் தெருவை சேர்ந்த ரமேஷ் (45) ஆகிய 2 பேரையும் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கட்டை பையில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மணலூர்பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 375 பாக்கெட் புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.