புகையிலையை காரில் கடத்தி வந்த 2 பேர் கைது
சிவகாசி அருகே புகையிலையை காரில் கடத்தி வந்த 2 பேைர போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே புகையிலையை காரில் கடத்தி வந்த 2 பேைர போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
சிவகாசி-எம்.புதுப்பட்டி ரோட்டில் கம்மாபட்டி என்ற பகுதியில் சிறப்பு பிரிவு போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து சிவகாசியில் உள்ள ஒரு மொத்த வியாபாரிக்கு 2 கார்களில் புகையிலை பொருட்கள் வந்துள்ளது.
இதை மடக்கி பிடித்த போலீசார் காரில் இருந்த சேலம் மாவட்டம் கெங்கவள்ளி தாலுகாவை சேர்ந்த ஆனந்தன் மகன் அருள்முருகன் (வயது 24), அங்கமுத்து மகன் தசரதன் (25) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்தி வந்த 2 கார்கள், புகையிலை விற்ற ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து எம்.புதுப்பட்டி போலீசில் ஒப்படைத் தனர்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி (பொறுப்பு) துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா நேற்று திருத்தங்கல் போலீஸ் நிலையத்துக்கு வந்து புகையிலை கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சிவகாசிக்கு கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து வந்தது தெரியவந்தது. பெங்களூருவில் இருந்து ஒரு மூடை ரூ.23 ஆயிரத்துக்கு புகையிலை பொருட்களை வாங்கி வரும் இவர்கள் சிவகாசி உள்ளிட்ட தமிழக பகுதியில் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.