சாராயம் கடத்திய 2 பேர் கைது

நாகூர் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-26 18:45 GMT

நாகூர்:

நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்கால் இருந்து நாகையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் சோதனை செய்த போது அதில் சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், மதுரை புதுசுக்கான்பட்டி பகுதியை சேர்ந்த பெரியவர் மகன் கார்த்தி (வயது28),அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ்கண்ணன் (28) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததும் ெதரிய வந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்