சாராயம் கடத்திய 2 பேர் கைது

திருமருகல் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-11-22 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

திருமருகல் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.அந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மூட்டையில் சாராயம் இருந்தது.

இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஒக்கூர் வடக்குத்தெருவை சேர்ந்த செல்லையன் மகன் சதீஷ்குமார் (வயது 26), ஒக்கூர் தெற்குத்தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் பிரபு (28) என்பதும்,இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு சாராயம் கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

2 பேர் கைது

இதுகுறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், பிரபு ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்