புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
மணலூர்பேட்டை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்,
மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்மோகன் தலைமையிலான போலீசார் கள்ளிப்பாடி கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையை போலீசார் சோதனை செய்த போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதேபோல் காங்கியனூர் கிராமத்தில் முருகன் என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையிலும் புகையிலை பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக கடையின் உரிமையாளர்கள் கண்ணன் மகன் மாசிலாமணி, முருகன் ஆகியோர் மீது மணலூா்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.