புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

திண்டுக்கல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-08 19:00 GMT

திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, ஏட்டு தனபால் ஆகியோர் நேற்று முன்தினம் பழனி பைபாஸ் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள பெட்டிக் கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3½ கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 26), போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த பூபதி (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்