புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-20 18:30 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார் வந்தன. அதன்பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காக்காபாளையம் கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி (வயது 56), பருக்கல் கிராமத்தை சேர்ந்த தினேஷ் (29) ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்