புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
தேனி பழைய பஸ் நிலையம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி பழைய பஸ் நிலையம் அருகில் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு தடைசெய்யப்பட்ட 15 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தன.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பண்ணைத்தோப்பை சேர்ந்த பிரபு (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதுபோல், தேனி சமதர்மபுரத்தில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சவுந்தரராஜன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.