விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு பள்ளிக்கூடம் அருகில் புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டு இருந்த கோடாரங்குளத்தைச் சேர்ந்த சந்திரன் (வயது 60) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 320 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சந்திரனுக்கு புகையிலை விற்றதாக அம்பையைச் சேர்ந்த ராஜேஷ் (41) என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.