புகையிலை விற்ற 2 பேர் கைது
புகையிலை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டியில் வசிக்கும் கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 44). இவரும், ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பகுத்தறிவு நகரை சேர்ந்த பாஸ்கர்(55) என்பவரும் தங்களின் கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.