மதுபாட்டில் சாராயம் விற்ற 2 பேர் கைது

சின்னசேலம் அருகே மதுபாட்டில் சாராயம் விற்ற 2 பேர் கைது

Update: 2023-01-16 18:45 GMT

சின்னசேலம்

சின்னசேலம்- நைனார்பாளையம் சாலை ரெயில்வே கேட் அருகே மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சின்னசேலம் போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்த சின்னசேலம் வினைதீர்த்தாபுரம், கிழக்கு காட்டுகொட்டாயை சேர்ந்த கருப்பன் மகன் ரவிக்குமார்(வயது 42) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 70 மதுபாட்டில்கள், ரூ.3 ஆயிரத்து 300 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கல்லாநத்தம் கிராமம் நாச்சியார்கோவில் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த தகரை வடக்கு தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் விஜய்(25) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 120 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்