மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் வெங்கடேசன் (வயது 28) என்பவர் தனது பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதைபோல் பொற்படாக்குறிச்சியில் மதுபாட்டில்களை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த கணேசன் (54) என்பவரை கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.