சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது

Update: 2023-05-31 18:45 GMT

கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் எரவாஞ்சேரி, கீழகாவாலக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எரவாஞ்சேரி சிவன் கோவில் தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் செல்வம் (வயது 30), கீழகாவாலக்குடி காளவாய்க்கரை பகுதியில் சாராயம் விற்ற கீழ காவாலக்குடி காலனி தெருவை சேர்ந்த தவமணி மகன் சார்லஸ் (27) ஆகிய 2 பேர் மீது கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் செல்வம், சார்லஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்