220 லிட்டர் சாராயம் பறிமுதல்
மயிலாடுதுறையில் சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர் 220 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது
மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணா நகர் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் மயிலாடுதுறை கூறைநாடு பூக்கடைத் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் அஜித் (வயது 22) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல மயிலாடுதுறை அருகே அடியாமங்களம் கிராமத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை பெரிய மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சத்தியசீலன் (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரிடமிருந்தும் தலா 110 லிட்டர் வீதம் 220 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.