சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது;

Update: 2023-02-05 18:45 GMT

கீழ்வேளூர் போலீஸ் சரகம் திருகண்ணங்குடி, நெம்மேலி பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருகண்ணங்குடி ெரயில்வே கேட் அருகில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருகண்ணங்குடி பெரியமுக்கால் வட்டம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரவீன் (வயது 19), கீீழ்வேளூர் நெம்மேலி பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் அன்பு செல்வன் (19) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்