திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலெட்சுமி மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை புறவழிச்சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த தலைவன்விளையை சேர்ந்த கார்த்திக் (வயது 30), தோப்புவிளையை சேர்ந்த டேனியல் (32) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 73 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.