சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2022-11-02 18:45 GMT


சங்கராபுரம்,

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சோழம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலேரி-சோழம்பட்டு செல்லும் சாலையில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்து, 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதபோல், சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் செல்லியம்பாளையம் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள ரெயில்வே பாலம் அருகில் 2 லாரி டியூப்களில் சாராயத்தை வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் பிடிக்க முற்பட்டனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடினர். உடன் துரத்தி சென்ற போலீசார் அதில் செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் அய்யப்பன் (36) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய பெரியசாமி மகன் குமார் என்பவரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்