மதுவிற்ற 2 பேர் கைது

மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-09-28 19:15 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 36) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 16 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் விக்கிரமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த கணேசன் (63) என்பவர் தனது சைக்கிள் கடையில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்