மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-18 18:30 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அழகப்பன் ஆகியோர் தனித்தனியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த இளவரசன் (வயது 53), தேவமங்கலம் ரோடு தெருவை சேர்ந்த பஞ்சநாதன் (80) ஆகியோர் தங்களது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து தலா 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்