சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சட்டவிரோதமாக மது விற்பதாக பல்வேறு புகார் வந்தன. இதன்பேரில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்சியம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காடுவெட்டி பஸ் நிலையம் அருகே மது விற்ற அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 56) என்பவரை கைது செய்தனர். இதேபோல் வீரசோழபுரம் பஸ் நிலையம் அருகே மது விற்ற ஆமணக்கன் தோண்டி மெயின் ரோடு தெருவை சேர்ந்த மனோகரன் (54) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 21 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.