தோகைமலை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளை பகுதியை சேர்ந்த ராஜலிங்கம், வேங்கடத்தாம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 70) அவரவர் வீடுகளின் பின்புறத்தில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.