கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியலூர் சடைய படையாச்சி தெருவை சேர்ந்த பாலயன் மகன் சக்திவேல்(வயது 31) என்பவர் கல்லங்குறிச்சி சுடுகாடு பகுதியிலும், வி.கைகாட்டி மெயின் ரோட்டை சேர்ந்த செல்வராஜ் மகன் அன்பழகன்(40) ஜி.கே.எம்.நகர் சுடுகாடு அருகேயும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.