நெல்லை சந்திப்பு போலீசார் நேற்று சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த பேட்டை சாஸ்திரி நகரை சேர்ந்த முருகன் (வயது 41), வண்ணார்பேட்டையை சேர்ந்த பிச்சுமணி (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 39 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.