மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-02-06 21:40 GMT

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டி.ஜி.புதூரை சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 33) என்பவர் டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்றது தெரிந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்கள்.

இதேபோல் டி.என்.பாளையத்தை அடுத்த கணக்கம்பாளையம் பகுதியில் மது விற்றுக்கொண்டிருந்த கணக்கம்பாளையம் பாரதி வீதியை சேர்ந்த ஆபிரகாம் (52) என்பவரை பங்களாப்புதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 58 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்