அருமனை:
அருமனை பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அருமனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மது விற்றதாக மணலிவிளையை சேர்ந்த பாலஸ் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல அருமனை புண்ணியம் பகுதியை சேர்ந்த சுந்தரபாய் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களும், மேல்புறம் தனியார் பாரில் இருந்து 25 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை அறிந்த விற்பனையாளர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.