கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 64) என்பவர் தனது வீட்டின் பின்புறத்திலும், வீரியப்பட்டியை சேர்ந்த முனியப்பன் (40) என்பவர் தனது பெட்டிக்கடையிலும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் மாயனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.