மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-10-14 19:02 GMT

குளித்தலை அருகே உள்ள சிவாயம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது விற்ற மேலப்பட்டியை சேர்ந்த வையாபுரி (வயது 70) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் நச்சலூர் அருகே உள்ள பொய்யாமணி கரைக்களம் இந்திரா காலனி பகுதியில் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்ற மகாலிங்கம் என்கிற அத்தாணி (வயது 55) என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்