மது விற்ற 2 பேர் கைது

வந்தவாசியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-27 13:53 GMT

வந்தவாசி

வந்தவாசி பகுதிகளில் மறைத்து வைத்து மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அ

தன்பேரில் தெற்கு போலீசார் கோட்டை காலனி பகுதியில் அய்யனாரப்பன் கோவில் அருகே ரோந்து சென்றனர்.

அப்போது போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சித்த கோட்டை காலனியை சேர்ந்த முகமதுபாஷா (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வந்தவாசி அருகே மேல்பாதி கிராமம் ஏரிக்கரை அருகே மது விற்ற ஜமாலுதீன் (54) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்