மது விற்ற 2 பேர் கைது
நெல்லையில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்ற தச்சநல்லூர் வாலாஜாபேட்டை நடுத்தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் தங்கமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சட்டவிரோதமாக மது விற்றதாக தச்சநல்லூர் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாராயணன் (38) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.