ஊட்டி
ஊட்டியை அடுத்த தும்மனட்டி பகுதியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக ஊரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் நாராயணன், கணேசன் ஆகியோர் டாஸ்மாக்கில் வாங்கப்பட்ட மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து, 240 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.