வியாபாரியிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது
வியாபாரியிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது
கோவை
கோவை உக்கடம், கோட்டைமேடு, பி.கே.செட்டி வீதியைச் சேர்ந்தவர் அகஸ்டின் (வயது 40).பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.இவர் பேரூர் ரோடு செட்டி வீதியில் உள்ள அம்பிகை மாரியம்மன் கோவில் வீதியில் நடந்து சென்றார்.அப்போது இவரை அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் வழிமறித்தனர்.கத்தியை காட்டி மிரட்டி சட்டை பையில் இருந்த ரூ.700-ஐ பறித்தனர்.
பின்னர் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அகஸ்டின் பெரியகடைவீதி காவல்நிலையத்தில்புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து புலியகுளம் அம்மன்குளம் நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சுபாஷ் (27), கோகுல்நாத் (27) ஆகியோரை கைது செய்தார்.இவர்கள் மீது ஏற்கனவே கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.