கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த தமிழரசன் என்பவர் அங்குள்ள முருகன் கோவில் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் தமிழரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தமிழரசன் அளித்த புகாரின் பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூரை சேர்ந்த விஜயகுமார் (வயது 36), மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலை சேர்ந்த செல்வம் (34) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், கடந்த ஜனவரி மாதம் இரும்புலிக்குறிச்சியில் டாஸ்மாக் கடையை உடைத்து திருடியது, 2 நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை பகுதியில் டாஸ்மாக் கடையை உடைத்து திருடியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.