கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-01-01 20:14 GMT

திருச்சி பீமநகர் நியூராஜா காலனியை சோ்ந்தவர் சுந்தரேசன் (வயது 54). இவர் நேற்று முன்தினம் காலை திண்டுக்கல் ரோடு கோரையாறு பாலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, தாராநல்லூர் தோப்பு தெருவை சோ்ந்த திவாகர் (21), கிரண்குமார் (22) ஆகியோர் சுந்தரேசனிடம் பணம் கேட்டுள்ளனா். ஆனால் அவர் பணம் தர மறுத்துள்ளார். இதையடுத்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.600-ஐ பறித்தனர். இது குறித்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட்டு போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், கண்டோன்மெண்ட் லாசன்ஸ்ரோடு பகுதியில் சோமரசம்பேட்டையை சேர்ந்த ஜான்செல்வராஜ் (23) என்பவரது மோட்டார் சைக்கிளையும் திருடியது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்