சிவகாசி,
சிவகாசி விஸ்வநத்தம் முருகையாபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 52). கூலி வேலை செய்து வரும் இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளைச்சாமியார் தெருவை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஹரிபிரியன் (22) ஆகியோர் ஈஸ்வரனை வழி மறித்து அரிவாளை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ.320-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து ஈஸ்வரன் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், ஹரிபிரியன் ஆகியோரை கைது செய்தனர்.