ரெயிலில் கஞ்சா கடத்திய வழக்கில்பெண் உள்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறைவிழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு

ரெயிலில் கஞ்சா கடத்திய வழக்கில் பெண் உள்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோா்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.;

Update: 2023-09-05 18:45 GMT


விழுப்புரம் வழியாக செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம்26-ந்தேதி விழுப்புரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ தலைமையிலான போலீசார் விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு சென்று, சோதனை நடத்தினர். அப்போது, அங்கு வந்த ஒரு ரெயிலில் இருந்து இறங்கி, கையில் பைகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு பெண் உள்பட 2 பேரை பிடித்து, அவர்கள் கையில் இருந்த பையை சோதனை செய்தனர். அந்த பையில் 39 கிலோ 700 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

2 பேர் கைது

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், தேனி மாவட்டம், தேவாரம் தாலுகா மீனாட்சிபுரம் அடுத்த மாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்த மாயி மனைவி சரஸ்வதி (வயது 57), மற்றொருவர் மஞ்சுநாயக்கன்பட்டி கணேசன் மகன் ரமேஷ்( 42) என்பதும், இவர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்து, பல்வேறு இடங்களில் விற்பனைக்கு வழங்க இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் மீது விழுப்புரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

10 ஆண்டுகள் சிறை

இது தொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்தநிலையில் நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், கஞ்சா கடத்திய சரஸ்வதி, ரமேஷ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கொடுமுடி சேரலாதன் ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்