வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை போலீஸ் நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழிப்பறி வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ஜெயராஜ் (வயது 41), மணிகண்டன் (29) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகனவள்ளி குற்றம் சாட்ட 2 பேருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்திய கோர்ட்டு போலீஸ்காரர் சீனிவாசன் ஆகியோரை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டினார்.