மடிக்கணினி திருடிய 2 பேருக்கு 6 ஆண்டு சிறை

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மடிக்கணினி திருடிய 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பொள்ளாச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-07-06 17:34 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மடிக்கணினி திருடிய 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பொள்ளாச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

நகராட்சி பள்ளியில் மடிக்கணினி திருட்டு

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்குவதற்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வைக்கப்பட்ட இருந்தன. இந்த நிலையில் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த 10 மடிக்கணினிகள் திருடுபோனதாக பள்ளி தலைமை ஆசிரியர் கோபால்சாமி பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மோதிராபுரத்தை சேர்ந்த ரத்தினகுமார், மரப்பேட்டை வீதியை சேர்ந்த ரகுபதிராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

6 ஆண்டு சிறை

இந்த வழக்கு பொள்ளாச்சி ஜே.எம். 2 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்டன் குற்றம்சாட்டப்பட்ட ரத்தினகுமார், ரகுபதிராஜ் ஆகியோருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்