வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை அருகே உள்ள ஆரைகுளத்தை சேர்ந்தவர் பால்மாரியப்பன் (வயது 38). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அரிவாளால் தாக்கி ரூ.250, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பால்மாரியப்பன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் (23), அய்யப்பன் (23) ஆகியோரை கைது செய்தார். மேலும் கைது செய்யப்பட்ட சங்கரலிங்கம் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.