கொலை குற்றத்தில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ஆரோவில் அருகே கொலை குற்றத்தில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கோட்டக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் குமரவேலன் (வயது 37), கோட்டக்கரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் பாலச்சந்தர் (36). இவர்கள் மீது ஆரோவில் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 10.8.2022 அன்று கோட்டக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (50) என்பவரை கொலை செய்த வழக்கில் குமரவேலன், பாலச்சந்தர் ஆகிய இருவரையும் ஆரோவில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் குமரவேலன், பாலச்சந்தர் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும். அவர்கள் இருவருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.