தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-04 20:30 GMT

அன்னதானப்பட்டி,

சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). அம்பாள் ஏரி ரோடு பராசக்தி நகரை சேர்ந்தவர் சதீஸ் (26). இவர்கள் இருவரும் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரகாஷ், சதீஸ் ஆகியோர் தொடர்ந்து வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனருக்கு அன்னதானப்பட்டி போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து பிரகாஷ், சதீஸ் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். ஏற்கனவே 2016 மற்றும் 2021-ம் ஆண்டில் பிரகாஷ் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்