டிராக்டர் மீது லாரி மோதியதில் 2 பேர் படுகாயம்

டிராக்டர் மீது லாரி மோதியதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-12-29 19:41 GMT

மங்களமேடு:

மதுரையில் இருந்து கேட்டரிங் சர்வீசுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, சின்னாறு பகுதியில் நள்ளிரவில் அந்த கன்டெய்னர் லாரி வந்தது. அப்போது முன்னால் கரும்பு கட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டரின் பின்புறம் அந்த லாரி மோதியது.

இதில் லாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி லாரியின் டிரைவர் சென்னை வேம்புலி அம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர்(வயது 34), அதில் பயணம் செய்த சென்னை மேடவாக்கம் வங்கி ரோடு சன்னியாசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த நாகராஜ்(38) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள், 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்