திருச்சி அருகே குமுளூர் கிராமத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 2 பேர் காயம்

திருச்சி அருகே குமுளூர் கிராமத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-05-19 19:45 GMT

திருச்சி அருகே குமுளூர் கிராமத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 245 மாடுபிடி வீரர்களும், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 666 காளைகளும் கலந்து கொண்டன.

ஜல்லிக்கட்டை லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காலை 8.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிகட்டு மாலை 3 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

26 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் 10 குழுக்களாக வீரர்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவாக காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது, காளைகள் முட்டியதில் 26 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு முகாமில முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த 6 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், கட்டில்கள், பீரோக்கள், சைக்கிள், மின்விசிறி, சில்வர் அண்டாக்கள், டீப்பாய், செல்போன்கள் மற்றும் வேட்டி-சேலைகள் உள்ளிட்ட என ரூ.5 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்