சாராயம் விற்பனை பெண் உள்பட 2 பேர் கைது
சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்பனை பெண் உள்பட 2 பேர் கைது;
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் அரசம்பட்டு, எஸ்.வி.பாளையம் ஆகிய கிராமங்களில் தீவிர ரோந்துபணியில் இருந்தனர். அப்போது சாரயம் விற்பனை செய்து கொண்டிருந்த அரசம்பட்டை சேர்ந்த ராமர் மனைவி சின்னப்பிள்ளை(வயது 41), எஸ்.வி.பாளையத்தை சோ்ந்த சண்முகம்(63) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 25 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.